நதிப்பாலம் ரோட்டில் சாய்ந்த மரம் அகற்றம்

தேவிபட்டினம்: நதிப்பாலம் ரோட்டில் மழைக்கு சாய்ந்த புளிய மரத்தை தீயணைப்பு வீரர்கள் அகற்றி வாகன போக்குவரத்தை சீர் செய்தனர்.

தேவிபட்டினம் கோப்பேரிமடம் விலக்கில் இருந்து சித்தார் கோட்டை, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம், நதிப்பாலம் வழியாக, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் மூலம் அப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வருவதுடன், ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகளும் பயனடைகின்றனர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில் நேற்று முன்தினம் இரவில் பெய்த மழையால் ரோட்டோரத்தில் இருந்த பெரிய புளிய மரம் ரோட்டின் குறுக்கே சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தகவலின் பெயரில் ராமநாதபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலர்கள் ரோட்டின் குறுக்கே கிடந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

Advertisement