ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கேன் வசதியில்லாமல் கர்ப்பிணிகள் அவதி
தொண்டி: தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கேன் வசதியில்லாததால் கர்ப்பணிகள் ராமநாதபுரத்திற்கு அலைகின்றனர். தொண்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய் சேய் நலத்திற்காக 30 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. தினமும் 400க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். பிரசவங்கள் நடப்பதோடு கர்ப்பிணிகள் தொடர் சிகிச்சைக்காகவும் செல்கின்றனர். ஸ்கேன் வசதியில்லாததால் கர்ப்பிணிகள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கோ அல்லது தனியார் ஸ்கேன் சென்டர்களுக்கோ செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தொண்டி மக்கள் நல பணிக்குழுவினர் கூறியதாவது:
ஸ்கேன் வசதியில்லாததால் ஏழை கர்ப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தாய்மாமன் சீர் பெறும் வரை இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கேன் போன்ற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜிவிடம் மனு கொடுத்துள்ளோம்.
தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் போதிய வசதிகள் இல்லை. எனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு தனி வார்டு அமைக்க வேண்டும் என்றனர்.