தம்பதியர் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு
உசிலமபட்டி: எழுமலை தம்பதியர் போலீசாரிடம் ஒப்படைத்த ஒன்றரை பவுன் நகை குறித்து விசாரித்த போலீசார், உரியவர்களிடம் அதனை வழங்கினர்.
எழுமலையைச் சேர்ந்த தங்கவேல்71, உமாராணி தம்பதியர் சிலநாட்களுக்கு முன் ரோட்டோரம் ஒன்றரை பவுன் நகையை கண்டெடுத்தனர். அதனை கடந்த அக். 14 ல், உசிலம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி. ஜெயகணேசனிடம் ஒப்படைத்தனர்.
நகை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மதுரை அனுப்பானடி ரமேஷ் 29, என்பவருக்கு சொந்தமான நகை என்பது தெரியவந்தது. இவர் எழுமலை அருகே செல்லாயிபுரத்தில் நடந்த புரட்டாசி பொங்கல் விழாவுக்கு குடும்பத்தினருடன் வந்துள்ளார்.
தனது தாயாருக்கு எழுமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருந்து வாங்க வந்த போது தவறவிட்டதாக தெரிவித்தார். மேலும் நகைக்கான உரிய ஆதாரங்களை போலீசாரிடம் கொடுத்தார். இதையடுத்து அந்த நகையை போலீசார் அவரிடம் ஒப்படைத்தனர். நகையை பெற்ற ரமேஷ் குடும்பத்தினர், தம்பதியர், போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும்
-
கணவனுக்கு வீரவணக்கம் செலுத்திய மனைவியால் போலீசார் நெகிழ்ச்சி
-
இறக்கும் தருவாயிலும் பயணியர் உயிரை காப்பாற்றிய டிரைவர்: 86 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்
-
குமரியில் ரயில்தடம் புரண்டு விபத்து; ரயில்சேவை பாதிப்பு
-
அமெரிக்கா தலைமையில் முத்தரப்பு பேச்சு: புடின், ஜெலென்ஸ்கி சம்மதம்
-
திருநெல்வேலியில் அதிக மழைப்பொழிவு எங்கு தெரியுமா?
-
தவறான விளம்பரங்கள், விதி மீறல் குற்றச்சாட்டு; நெஸ்லே இந்தியா, வெல்நெஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்