அமெரிக்கா தலைமையில் முத்தரப்பு பேச்சு: புடின், ஜெலென்ஸ்கி சம்மதம்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: நீண்ட காலமாக நீடித்து வரும் உக்ரைன் - ரஷ்யா போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அமெரிக்கா முன்னெடுக்கும் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனான பேச்சுவார்த்தையை முடித்த அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப், உடனடியாக ரஷ்யா விரைந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அதிபர் புடினை நேரில் சந்தித்துப் பேசினார்.
3 மணி நேர ஆலோசனை:
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள கான்ஸ்டான்டின் அரண்மனையில் நடைபெற்ற இச்சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நீடித்தது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கான திட்டங்களை புடினிடம் விட்காப் சமர்ப்பித்தார். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் இணைந்து பங்கேற்கும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து இரு தரப்பிலும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
விடிவு காலம்?
முன்னதாக ஓஸ்லோவில் நடந்த சந்திப்பில், விட்காபுடன் பேசிய ஜெலென்ஸ்கி, போரை முடிவுக்குக் கொண்டுவர தாங்கள் விரும்புவதாகவும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் தெளிவுபடுத்தியிருந்தார். தற்போது புடினும் இம்முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், நீண்ட காலப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அமைதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்
-
கணவனுக்கு வீரவணக்கம் செலுத்திய மனைவியால் போலீசார் நெகிழ்ச்சி
-
இறக்கும் தருவாயிலும் பயணியர் உயிரை காப்பாற்றிய டிரைவர்: 86 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்
-
குமரியில் ரயில்தடம் புரண்டு விபத்து; ரயில்சேவை பாதிப்பு
-
திருநெல்வேலியில் அதிக மழைப்பொழிவு எங்கு தெரியுமா?
-
தவறான விளம்பரங்கள், விதி மீறல் குற்றச்சாட்டு; நெஸ்லே இந்தியா, வெல்நெஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்
-
உ.பி.,யில் மின்சாரம் தாக்கிய 3 பேர் பலி; துர்கா சிலை ஊர்வலத்தின் போது சோகம்