குமரியில் ரயில்தடம் புரண்டு விபத்து; ரயில்சேவை பாதிப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட எல்லை பாறசாலையில் நிலச்சரிவு காரணமாக ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
பிலாஸ்பூரிலிருந்து திருநெல்வேலி நோக்கி (ரயில் எண் 22619) எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 2 மணியளவில் கேரள மாநிலம் பாறசாலை ரயில் நிலையம் அருகே பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. மண் தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் தடம் புரண்டது.
இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு பெய்த கனமழையே இந்த நிலச்சரிவுக்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கணவனுக்கு வீரவணக்கம் செலுத்திய மனைவியால் போலீசார் நெகிழ்ச்சி
-
இறக்கும் தருவாயிலும் பயணியர் உயிரை காப்பாற்றிய டிரைவர்: 86 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்
-
அமெரிக்கா தலைமையில் முத்தரப்பு பேச்சு: புடின், ஜெலென்ஸ்கி சம்மதம்
-
திருநெல்வேலியில் அதிக மழைப்பொழிவு எங்கு தெரியுமா?
-
தவறான விளம்பரங்கள், விதி மீறல் குற்றச்சாட்டு; நெஸ்லே இந்தியா, வெல்நெஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்
-
உ.பி.,யில் மின்சாரம் தாக்கிய 3 பேர் பலி; துர்கா சிலை ஊர்வலத்தின் போது சோகம்
Advertisement
Advertisement