‘‘தினமலர் நாளிதழின் கல்வி சேவை பாராட்டுக்குறியது’’ டவுன் டி.எஸ்.பி.,ரமேஷ்ராஜ் பேச்சு

செஞ்சி: தினமலர் நாளிதழின் கல்வி சேவை பாராட்டுக்குறியது என வித்யாரம்பம் நிகழ்ச்சியில் டவுன் டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் பேசினார்.

செஞ்சியில் நடந்த தினமலர் வித்யாரம்ப நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., பேசியதாவது:

1987 ம் ஆண்டு நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான என்னுடைய தாத்தா, தினமலர் நாளிதழில் வெளியாகும் வினாக்களுக்கு உரிய பதிலை தொகுத்து, கிராமத்திலுள்ள வசதியில்லாத மாணவர்களுக்கு கொடுப்பார்.

தொடர்ந்து நானும் அதை படித்தேன். அப்படித்தததால்தான் எங்கள் கிராமத்தில் இரண்டு பேர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றோம். தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பிலும் இரண்டு பேர் மட்டும் தேர்ச்சி பெற்றோம். அதற்கு முக்கிய காரணம் தினமலர் தான். தொடர்ந்து தினமலரின் கல்விச்சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

தினமலரின் பட்டம் இதழ் மாணவர்களுக்கு தேவையான நல்ல கருத்துக்கள், கல்வி வளர்ச்சியை ஊக்கு விக்கின்றது. அதே போல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பிறகு என்ன படிக்கலாம் என்பதை அனைத்து ஊர்களிலும் விழா நடத்தி தெரிவிக்கின்றனர். தினமலர் நாளிதழின் சேவை தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இன்றைக்கு தினமலர் நடத்தும் இந்த விழாவில் குழந்தைகளை சேர்க்க வந்திருக்கும் பெற்றோர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன், என்று டி.எஸ்.பி.,ரமேஷ்ராஜ் பேசினார்.

Advertisement