அரிசியில் எழுதிய ‘அ’ என்ற எழுத்து அழியாத நினைவு: ஜே.எஸ்., பள்ளி நிறுவனர் செந்தில்குமார் பெருமிதம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழுடன் இணைந்து வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்திய ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி நிறுவனர் செந்தில்குமார் கூறியதாவது:

கள்ளக்குறிச்சியில் வித்யாரம்பம் நிகழ்ச்சியை நடத்திய ‘தினமலர்’ நாளிதழை பாராட்டுகிறோம். இந்நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகள் அரிசியில் எழுதிய ‘அ’ என்ற எழுத்து, அழியாத நினைவாக மாறியுள்ளது. கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி கடந்த 6 கல்வி ஆண்டுகளாக நுாறு சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறது.

இங்கு பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்று மாநில, மாவட்ட அளவில் சாதனை படைத்து வருகின்றனர்.

பள்ளியில் மொழி, அறிவியல், கணினி மற்றும் ‘ஏஐ’ ரோபோடிக்ஸ் ஆய்வகங்கள் உள்ளன. ஸ்மார்ட் பலகைகள் மூலம் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு பாடம் கற்பிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக மெய்நிகர் ஆய்வகம் எனப்படும் ‘விர்ச்சூவல் லேப்’, மேம்பாடு கருவிகளுடன் அதிநவீன ஆய்வகம், பன்முக மொழித்திறன்களை மேம்படுத்த ‘ஆடியோ விஷ்வல் லாங்வேஜ் மினி தியேட்டர்’, ஆடிட்டோரியம் உள்ளது. கையெழுத்து அழகாக இருப்பதற்காக தனி பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறு வயதில் இருந்தே மத்திய, மாநில அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்பதற்காக ‘ஆஸ்டிடியூட்’ என்ற வகுப்பு மூலம் 8 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜே.இ.இ., நீட் மற்றும் ஜே.ஐ.ஐ.டி., தேர்வுகளுக்கான பவுண்டேஷன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக, கேரளா மற்றும் சென்னையில் இருந்து அனுபவமிக்க ஆசிரியர்கள் வரவழைக்கப்படுகின்றனர். மற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விருப்பமிருந்தால் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். என்.சி.சி., மூலம் மாணவர்களுக்கு சமூக பொறுப்புகள் கற்பிக்கப்படுகிறது.

இவ்வாறு செந்தில்குமார் தெரிவித்தார்.

Advertisement