டீப் டெக் ஸ்டார்ட்அப் கொள்கை(Tag) ஆழ் - தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி வரை மானியம்
அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க, தமிழக அரசு 'டீப் டெக் ஸ்டார்ட்அப் கொள்கை 2025–26'ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஆராய்ச்சி, புதிய பொருட்கள் உருவாக்கம், சோதனை உற்பத்தி, வணிகமயமாக்கல் உள்ளிட்ட பணிகளுக்கு பல்வேறு நிதியுதவிகள் இக்கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
யாருக்கு?
*செயற்கை நுண்ணறிவு, ரோபோ, உயிரி தொழில்நுட்பம், மின்னணு ‘சிப்’உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்கள்.
*ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் வளர்ப்பு மையங்கள்.
என்ன சலுகை?
நிதியுதவி அதிகபட்ச தொகை
ஆய்வக ஆராய்ச்சி, சோதனை ஆண்டுக்கு ரூ.10 லட்சம்
புதிய பொருள் உருவாக்கம் ரூ.15 லட்சம்
காப்புரிமைச் செலவு ரூ.10 லட்சம்
சோதனை உற்பத்தி ரூ.50 லட்சம்
வணிகமயமாக்கல் ரூ.1–5 கோடி
ஆராய்ச்சியாளர் தொழில் தொடங்க ரூ.25 லட்சம்
கூடுதல் உதவிகள்
*தொழில் வளர்ப்பு மையங்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை.
*வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் கூட்டுத் திட்டங்களுக்கு ரூ.50 லட்சம் வரை.
*சர்வதேச ஆராய்ச்சிப் பரிமாற்றத்துக்கு ரூ.10 லட்சம் வரை.
*வெளிநாட்டுக் கண்காட்சி செலவுகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை.
*அரசு ஆதரவு பெற்ற தொழில் பூங்காக்களில் அலுவலகம், ஆய்வக வாடகைக்கு மானியம்.
எவ்வளவு மானியம்?
சலுகை சதவீதம்
புதிய பொருள் உருவாக்கம் 75% வரை
அலுவலகம், ஆய்வக வாடகை 50%
வெளிநாட்டுக் கண்காட்சி 50% வரை
தகுதியான நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன மானியம் 0.50%–1.00%
தகுதி என்ன?
தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட அல்லது செயல்படும் நிறுவனமாக இருக்க வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களைத் தவிர்த்து, மொத்தப் பணியாளர்களில் குறைந்தது 25 சதவீதம் பேர் தமிழகத்தில் பணியாற்ற வேண்டும்.
வெளிமாநில நிறுவனங்களுக்கு தமிழகத்தில் 20 சதவீதப் பணியாளர்கள் அல்லது குறைந்தது 20 முழுநேரப் பணியாளர்கள் இருக்க வேண்டும்.
கொள்கையின் இலக்கு
ஐந்து ஆண்டுகளில் 100 ஆழ்நிலை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்குதல்.
அரசு, தனியார் முதலீடுகள் வாயிலாக ரூ.100 கோடி திரட்டுதல்.
10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளித்தல்.
கவனிக்க:
ரூ.5 கோடி வரையிலான மானியம், தொழில்நுட்ப தயார்நிலை 7ஐ அடைந்த தகுதியான நிறுவனங்களுக்கு மட்டுமே. அனைத்து உதவிகளும் தனித்தனி நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. விண்ணப்பங்கள் பெறப்படும் தற்போதைய நிலையை உறுதிப்படுத்த வேண்டும்.
கொள்கை விபரங்களுக்கு: itnthub.tn.gov.in
மேலும்
-
பிரியங்கா மகன் நடத்திய கண்காட்சியில் சர்ச்சை புகைப்படங்கள் அகற்றம்
-
செங்கடலில் கப்பல் மீது சவுதி அரேபியா தாக்குதல்; இந்தியர்கள் 14 பேர் பத்திரமாக மீட்பு
-
அங்கன்வாடி மையம் புதுப்பிக்கும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
-
கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியத்தில் புல் நறுக்கும் கருவி
-
கடலுார் சிறையில் மொபைல் பறிமுதல்
-
எல்லாரும் வாழும் எம்ஜிஆர் ஆகிட முடியாது; அதுக்கு மனசு வேணும்: அமைச்சர் கீர்த்தனா பேட்டி