கட்டடங்களில் பழுது நீக்கும் பணிகள் குழப்பங்களுக்கு மாநகராட்சி விளக்கம்
புதுடில்லி: கட்டடங்களின் அனைத்து பழுதுபார்ப்பு பணிகளுக்கும் கட்டட திட்ட அனுமதி தேவையில்லை என்று, டில்லி மாநகராட்சி தெளிவு படுத்தி உள்ளது.
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், டில்லியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய கட்டுமானப்பணிகள், இடிப்பு பணிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு கட்டட திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கட்டடங்களின் சாதாரண பழுதுபார்ப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளுக்கும் கட்டட திட்ட அனுமதி கோரி ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது தொடர்பாக டில்லி மாநகாட்சி தலைவர் மனோஜ் குமார் திவேதி கூறியதாவது:
விழிப்புணர்வு மற்றும் தெளிவின்மை காரணமாக, கட்டட உரிமையாளர்கள் மற்றும் பயனர்கள், உண்மையில் அனுமதி தேவையில்லாத பணிகளுக்கும் அனுமதி கோரி விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சில சமயங்களில், அவர்கள் அமலாக்க அதிகாரிகளால் தேவையற்ற துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடுவதாகவும் தெரியவந்துள்ளது.
அனைத்து பழுதுபார்ப்புப் பணிகளுக்கும் கட்டடத் திட்ட அனுமதி தேவையில்லை. புதுடில்லி மாநகராட்சி மன்ற சட்டத்தின் 236 முதல் 239 வரையிலான பிரிவுகளின் கீழ் வரும் பணிகளுக்கு மட்டுமே முன் அனுமதி கட்டாயம். அந்த கட்டடங்களின் தரைப்பரப்பு விகிதத்தை அதிகரிக்காவிட்டாலும், முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டமைப்பு ரீதியான கூடுதல் மாற்றங்கள் மற்றும் சாதாரண பராமரிப்புப் பணிகள் அல்லது கட்டமைப்பு அல்லாத புதுப்பித்தல் பணிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் உள்ளன. இதை தெளிவுபடுத்தும் வகையில் விரிவான பட்டியல் வெளியிடப்படும். இதன் மூலம், எந்தெந்தப் பணிகளுக்கு அனுமதி தேவையில்லை, எவற்றிற்கு முன் அனுமதி அவசியம் என்பது குறித்த தெளிவு கிடைக்கும். .
கட்டடப் பயனர்கள் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் எந்தவித சிரமமோ அல்லது குழப்பமோ அடையாதவாறு, விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
மேலும்
-
குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
-
சவுதியில் சிக்கிய இந்தியர்களை மீட்க வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை
-
அமெரிக்காவில் தீபாவளிக்காக சிறப்பு தபால்தலை வெளியீடு
-
பைக் – வேன் மோதல் : தாய், குழந்தை சாவு
-
கோர்ட் அவமதிப்பு வழக்கு கலெக்டர் பதிலளிக்க உத்தரவு
-
பண்ருட்டி கிராம உதவியாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல்