அரசு மருத்துவமனை கட்டடம் திறப்புமழை நீர் கசிவால் கலெக்டர் அதிருப்தி

1

திருவாடானை: திருவாடானையில் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டடம் திறப்பு விழாவின் போது மழை நீர் கசிவு ஏற்பட்டதால் கலெக்டர் அதிருப்தியடைந்தார். திருவாடானை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.3.50 கோடியில் புதிய கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டடத்தின் திறப்பு விழா இன்று நடந்தது. சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜிவ் திறந்து வைத்தார். அமைச்சர் வருவதற்கு சற்று முன்பு கலெக்டர் சிவகுருபிரபாகரன் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் பகுதியை ஆய்வு செய்தார்.

அப்போது கட்டடத்தின் மேல் பகுதியிலிருந்து மழை நீர் கசிந்து வழிந்தது. உடனடியாக அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து கட்டடத்தின் தரம் குறித்து அதிருப்தியை தெரிவித்தார். விரைவில் சீரமைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அச்சங்குடியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகம், தொண்டியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடங்கள் திறக்கப்பட்டது.

Advertisement