மாட்டு சாணியில் இத்தனை மகத்துவமா?
முன்பெல்லாம் வீட்டைச் சுத்தம் செய்ய மாட்டுச் சாணம் மற்றும் மஞ்சள் மட்டுமே பயன்படுத்தினர். வீட்டைச் சாணி வைத்து வழித்தாலே, ‘என்னம்மா... நோம்பி வந்துருச்சு போல, பலகாரம்லாம் இல்லையா’ என்று அக்கம்பக்கத்தினர் கேட்பர்.
ஆனால் இன்றோ வாசலில் பெண்கள் சாணம் போட்டு வழிப்பதே இல்லை. அதைத் தொடக்கூட அருவருப்பு அடைகின்றனர். சில வீடுகளில் வாசலே இருப்பதில்லை.
முன்பெல்லாம் வீடுகளில் மண் தரையே இருந்தது. அந்த மண் எழும்பாமல் இருக்க மாட்டுச் சாணத்தை வைத்து வழிப்பர். இப்போது எல்லா வீடுகளிலும் டைல்ஸ் பதிக்கின்றனர். இதனால் வீட்டைச் சுத்தம் செய்ய மக்கள் ரசாயனங்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த ரசாயனங்கள் நல்ல பாக்டீரியாக்களையும் அழிக்கிறது. அதற்கு நீரில் மஞ்சள், சிறிதளவு சாணம் சேர்த்து வீட்டைச் சுத்தம் செய்வது நல்லது.
மாட்டுச் சாணம் ஒரு நல்ல இயற்கைப் பூச்சி விரட்டி. இதைப் பயன்படுத்தி வீடு வழித்தால் கொசுக்கள், ஈக்கள், தேள்கள், பூரான்கள் மற்றும் பிற விஷப்பூச்சிகள் வீட்டுக்குள் வராமல் தடுக்கப்படுகிறது என்று கூறுவர்.
இது வெப்பத்தைக் கட்டுப்படுத்தும். இதனால் கோடைக்காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் கதகதப்பையும் தருகிறது.
வாசலில் வெறும் காலில் நடக்கும்போது தூசி பறக்கும். சாணத்தில் உள்ள நார்ச்சத்தானது ஒரு இயற்கை சிமென்ட் போலச் செயல்படுகிறது.
இது ஒரு நல்ல கிருமிநாசினியாகச் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதில் இருக்கும் இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் பரவாமல் தடுத்து, வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறது.
சாணத்தைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகும். இதை வழித்து காய்ந்த பிறகு எந்தத் துர்நாற்றமும் வராது. மாறாக மண் வாசனை மட்டுமே வீசும்.
நம் பண்பாட்டில் பசுவின் சாணம் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. இதை மிகவும் புனிதமாகக் கருதுகின்றனர். இதன் மூலம் வீட்டுக்குப் பாசிட்டிவ் எனர்ஜி, லட்சுமி கடாட்சம் கிடைப்பதாகவும் கூறுவர்.
இது மட்டும் இல்லாமல் சாணி வழிக்கும் போது குனிந்து வழிப்பதால், உடலில் உள்ள தேவையற்ற நீர் வடிந்து விடும். வளைந்துக்கொடுக்கும் தன்மையும் உடலுக்கு வருகிறது என்கின்றனர்.
– மதுஸ்ரீ
மேலும்
-
நிலக்கரி கப்பல் மோதி மீன்பிடி வலைகள் சேதம்
-
லஞ்சம்: 22 பேரிடம் விசாரணை
-
3 பாசனங்களுக்கும் விதிகள் மாறாமல் நீர் வினியோகம்: முத்தரப்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
-
மரக்கிளைகள் வீசியவர்களை தட்டிக்கேட்ட டாக்டர் ரம்பத்தால் தாக்க முயன்ற மாநகராட்சி அதிகாரிகள்
-
நெற்பயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய விவசாயிகளுக்கு பிரீமியம் செலுத்தி பதிவு செய்ய நவ.16 கடைசி நாள்
-
மழைக்கு முன் சீரமைக்காமல் விடப்பட்ட சாலைகள்: காஞ்சி மாநகராட்சி அலட்சியத்தால் வாகன ஓட்டிகள் அவதி