முதலீட்டு செலவுகளை மேற்கொள்ளாமல் கடன் தேவை குறைந்ததாக சொல்வதா? த.வெ.க., அரசுக்கு தி.மு.க., ‘மாஜி’ கேள்வி
சென்னை: ‘குறைந்த அளவிலேயே வருவாய் உள்ள நிலையில், முதலீட்டு செலவுகளை மேற்கொள்ள முடியாமல், த.வெ.க., அரசு திணறுவதால் மட்டுமே கடன் தேவை குறைந்துள்ளது’ என, தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
முந்தைய 2025 – 26ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், மாநில அரசு பத்திரங்கள் வாயிலாக திரட்டிய கடன் 21 சதவீதம் குறைந்துள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளது. குறைந்த அளவே கடன் வாங்கியுள்ளதாக கூறி, அதை ஒரு சாதனையாக முன்னிறுத்த த.வெ.க., அரசு முயற்சிக்கிறது. ஆனால், கடன் தேவை எவ்வாறு குறைந்தது என்பதையும், முதல் அரையாண்டில் மேற்கொண்ட வளர்ச்சி பணிகளையும், மூலதன செலவு விபரங்களையும் வெளியிடவில்லை.
தி.மு.க., ஆட்சியில், 2025 – 26 பட்ஜெட்டில் மூலதன செலவுகளுக்கு, 57,231 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில், மத்திய தணிக்கையாளரின் தற்காலிக மாதாந்திர கணக்கின்படி, 2025 ஏப்., முதல் செப்., வரை, 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கான மூலதன செலவு மேற்கொள்ளப்பட்டது.
த.வெ.க., அரசு, நடப்பு நிதியாண்டில், மூலதன செலவுகளுக்காக ஒதுக்கிய மொத்த நிதியில், ஏப்., முதல் செப்., வரையிலான காலத்தில் மேற்கொண்ட மூலதனச் செலவு எவ்வளவு; புதிய உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு செலவிட்டது எவ்வளவு?
வளர்ச்சி பணிகளை தாமதப்படுத்தியும், செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகையை வழங்காமலும், பண இருப்பை அதிகமாக காட்டி, குறைந்த அளவே கடன் வாங்கி விட்டு, அதை நிதி மேலாண்மையின் சாதனை என கூற முடியுமா?
பட்ஜெட்டில், உத்தேசித்ததை விட குறைவாகவே வருவாய் உள்ள நிலையில், முதலீட்டு செலவுகளை மேற்கொள்ள முடியாமல், அரசு திணறுவதால் மட்டுமே கடன் தேவை குறைந்துள்ளது.
எனவே, இதை சாதனை என சொல்லி, ஏமாற்றுவதை விட்டுவிட்டு, மேற்கொண்ட மூலதன செலவு, செய்து முடித்த பணிகளுக்கு விடுவிக்காத நிலுவை தொகை உள்ளிட்ட முழு விபரங்களையும் அரசு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை