பள்ளி வளாகத்தில் வளர்ப்பு நாய்கள் வேட்டை: சிறுத்தையால் மாணவர்கள் அச்சம்
கோத்தகிரி:
கோத்தகிரி தனியார் பள்ளி வளாகத்தில், மூன்று வளர்ப்பு நாய்களை சிறுத்தை வேட்டையாடிய சம்பவத்தால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக, வனவிலங்குகளில் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள், தேயிலை தோட்டங்களில் பதுங்கி, அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், கோத்தகிரி - கட்டபெட்டு இடையே, வெஸ்ட் புரூக் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி வளாகத்திற்குள் நேற்று முன்தினம் மாலை, தடுப்பு சுவரை தாண்டி புகுந்த சிறுத்தை, அங்கு விளையாடிக் கொண்டிருந்த மூன்று வளர்ப்பு நாய்களை வேட்டையாடியது.
அதில், ஒரு பெரிய நாயை, கவ்வி செல்ல முடியாமல் இழுத்து சென்ற காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது. இதனால், பள்ளி மாணவர்கள் உட்பட, சுற்றுவட்டார குடியிருப்பு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ‘சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,’ என, பள்ளி நிர்வாகம் சார்பில் கட்டபெட்டு வனச்சரகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: திருச்சிக்கு புது போலீஸ் கமிஷனர்
-
நீங்கள் ஒன்னும் 'ஜென் ஸி' கிட்ஸ் கிடையாது...: கரப்பான் கும்பலை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்
-
காரைக்குடியில் அம்பு போடுதல் நிகழ்ச்சி
-
காத்திருப்பு அரியக்குடி ரயில்வே கேட் முன் வாகனங்கள் மேம்பாலம் இல்லாததால் அவதி தொடர்கிறது
-
கண்காட்சி கார்னர். சாக் கண்ணாடி, கதவு, அலுமினியம் டெக் எக்ஸ்போ – 2026
-
மானாமதுரையில் கரிமூட்ட தொழில் மும்முரம்