நீங்கள் ஒன்னும் 'ஜென் ஸி' கிட்ஸ் கிடையாது...: கரப்பான் கும்பலை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்

39

புதுடில்லி: தடையை மீறி டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி அமைப்பைச் சேர்ந்த சவுரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் அக்.,21 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காவல் இன்றுடன் முடிவடைகிறது. தங்களுக்கு எதிரான நீதிமன்ற காவலை எதிர்த்து இருவரும் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கரப்பான் அமைப்பினரை நீதிபதி சுப்ரமணியன் பிரசாத் கேள்விகளால் வெளுத்து வாங்கினார்.

நீதிபதி கூறியதாவது: பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்ற காவல் தொடர்பான விசாரணை நடத்தப்படுவதற்கு முன்பாக, நீங்கள் தனியாக வழக்குப் போட்டது ஏன்? அதுவரையில் உங்களால் காத்திருக்க முடியாதா?. மனுதாரர்களின் வயது முறையே 27 மற்றும் 31ஆக இருக்கும் போது, இவர்கள் 'ஜென் ஸி' பிரிவில் வர மாட்டார்கள். இவர்கள் ஏற்கனவே கையெழுத்திட்ட பிணைப் பத்திர உத்தரவாதத்தை மீறியுள்ளனர். மக்களாட்சியில் ஆட்சி மாற்றம் என்பது தேர்தல் மூலமே கொண்டு வரப்பட வேண்டும், எனக் கூறினார்.

கரப்பான் அமைப்பினரின் ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள விருப்பமில்லை என்று நீதிபதி பிரசாத் கூறியதால், மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

Advertisement