மானாமதுரையில் கரிமூட்ட தொழில் மும்முரம்
மானாமதுரை: சிவகங்கை,விருதுநகர்,ராமநாதபுரம் மாவட்டங்களில் கரிமூட்ட தொழில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு தயாரிக்கப்படும் கரி மானாமதுரையில் இருந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் விவசாயம் நடைபெறாத
காலங்களில் கருவேல மரங்களை வெட்டி கரிமூட்டம் போட்டு விறகு கரி தயாரிக்கும் தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, விவசாயம் குறைவாக நடைபெறும் பகுதிகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி, அவற்றை முறையாக அடுக்கி கரிமூட்டம் போட்டு
எரிப்பதன் மூலம் விறகு கரி தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் கரியைத் தரம்
பிரித்து மூடைகளில் நிரப்பி, விற்பனைக்காகச் சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தயாரிக்கப்படும் விறகு கரி மூடை மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து செல்லும் சரக்கு ரயில்கள் மூலம் பல்வேறு வெளி மாநிலங்கள் மற்றும் பூடான் நாட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
மேலும்
-
12வது மாடி ஜன்னலில் இருந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி