ஜல்லிக்கற்கள் கடத்தி வந்த லாரி பறிமுதல்

திருவாலங்காடு: கனகம்மாசத்திரம் அருகே, ஜல்லிக்கற்கள் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, கூளூர் அருகே, திருத்தணி ஆர்.டி.ஓ., ராஜகோபால் தலைமையிலான வருவாய் துறையினர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அனுமதியின்றி ஜல்லிக்கற்கள் கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து, வருவாய் ஆய்வாளர் முகமது அசாருதீன் அளித்த புகாரின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுநர் கபில்தேவ், 34, என்பவரை கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள லாரி உரிமையாளர் மற்றும் கல் குவாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.

Advertisement