காமாட்சியம்பாள் கோயிலில் நவராத்திரி உற்சவம் நிறைவு
கோவை: நவராத்திரி உற்சவம் மற்றும் கொலு வைபவம் விஜயதசமியான நேற்றுடன் நிறைவடைந்தது.
ஆர்.எஸ்.புரம் மேற்கு திருவெங்கடசாமி சாலையிலுள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நவராத்திரி துவங்கியது, முதல் அன்றாடம் காலை 7 மணிக்கு அம்பாளுக்கு அபிஷே கமும், 9 மணிக்கு தேவி மஹாத்மிய பாராயணமும், யாகசாலை பிரவேசமும் நடந்தது.
10 மணிக்கு மூலஸ்தானத்திலுள்ள அம்பாளுக்கு நவாவர்ண பூஜைகளும் ஸ்ரீசண்டிபாராயணமும் நடந்தது.
அன்றாடம் மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு புஷ்ப அலங்காரமும், யாகசாலையில் நவாவர்ணமும், ஸ்ரீ லலிதா திரிசதி பாராயணமும், லட்சார்ச்சனையும் நடந்தது.
நேற்று காமாட்சி அம்பாள் வீணை ஏந்தி சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியும், பாட்டு மற்றும் இசை கற்பிக்கும் பணிகளும் துவங்கின.
ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சன்னரக அரிசியை, ரேஷன் அரிசி என கூறுவது தவறு; அமைச்சர் வெங்கடரமணன்
-
'தேசமே முதன்மை' என்ற தாரக மந்திரம்; ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு பாஜ தேசிய தலைவர் பாராட்டு
-
உபியில் 125 தொகுதிகளில் களமிறங்க காங்., முடிவு: தொகுதி பங்கீட்டை கவனிக்கிறார் பிரியங்கா
-
பிரிட்டன் அரச குடும்பத்துடனான பிரச்னையை சரி செய்ய விரும்பும் இளவரசர் ஹாரி
-
நலத்திட்ட உதவி தொகை வழங்கல்
-
ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி ஆயுத பூஜை விழா
Advertisement
Advertisement