விழுப்புரத்தில் கண்ணதாசன் விழா
விழுப்புரம்: விழுப்புரத்தில் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில், 24ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா நடந்தது.
விழுப்புரம் ஏ.எஸ்.ஜி., மண்டபத்தில் நடந்த விழாவுக்கு, நற்பணி மன்ற தலைவர் முபாரக்அலி தலைமை தாங்கினார். துணை செயலாளர் சாம்பசிவம் வரவேற்றார். வழக்கறிஞர் தயானந்தம், வணிகர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
கவியரசு கண்ணதாசனின் படத்தை திறந்து வைத்து, முன்னாள் எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா துவக்கி பேசினார். கவிஞர் கண்ணதாசனின் மகனும், திரைப்பட இயக்குநருமான அண்ணாதுரை கண்ணதாசன் சிறப்புரையாற்றினார். கம்பன் கழக தலைவர் தனபால், அரிமா சங்கம் வெங்கடேசன், ரோட்டரி சங்கம் தியாகராஜன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். கவிஞர் மதுரை இந்திரா விஜயலட்சுமி எழிலுரையாற்றினார்.
தொடர்ந்து, இரண்டாம் நாள், நுால் வெளியீடு நிகழ்வுக்கு வி.ஆர்.பி., பள்ளி தாளாளர் சோழன் தலைமை வகித்தார். கவிஞர் தமிழரசி எழுதிய நின்னைச் சரணடைந்தேன் என்ற நுாலை எழுத்தாளர் ராமமூர்த்தி வெளியிட்டார். திரைப்பட இயக்குநர் அழகப்பன் சிறப்புரையாற்றினார்.
கண்ணாதாசன் குறித்த பட்டிமன்றத்தை லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். கலைமாமணி காங்கேயன் தலைமையில் பட்டி மன்றம் நடந்தது. நாட்டிய நிகழ்ச்சியை முன்னாள் சேர்மன் ஜனகராஜ் துவக்கி வைத்தார். பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
மேலும்
-
சன்னரக அரிசியை, ரேஷன் அரிசி என கூறுவது தவறு; அமைச்சர் வெங்கடரமணன்
-
'தேசமே முதன்மை' என்ற தாரக மந்திரம்; ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு பாஜ தேசிய தலைவர் பாராட்டு
-
உபியில் 125 தொகுதிகளில் களமிறங்க காங்., முடிவு: தொகுதி பங்கீட்டை கவனிக்கிறார் பிரியங்கா
-
பிரிட்டன் அரச குடும்பத்துடனான பிரச்னையை சரி செய்ய விரும்பும் இளவரசர் ஹாரி
-
நலத்திட்ட உதவி தொகை வழங்கல்
-
ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி ஆயுத பூஜை விழா