வீட்டின் பூட்டு உடைத்து நகை திருடியவர் கைது
பண்ருட்டி: வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அருகே உள்ள நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன். விவசாயி; இவர் கடந்த செப்.,25 ம் தேதியன்று காலை 8:00 மணியளவில் தனது வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்தினருடன் திருவந்திபுரம் பெருமாள் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் மதியம் 12:00 மணியளவில் வீட்டுக்கு வந்தார்.
அப்பொழுது வீட்டின் பின்பக்க கதவை மர்ம நபர்கள் உடைத்து, உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் பண்ருட்டி அருகே உள்ள கொள்ளுக்காரன்குட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது பைக்கில் வந்த நபரை, நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அவர், விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தை சேர்ந்த துரைராஜ் மகன் சந்தோஷ் குமார்,38 என தெரிந்தது. மேலும், நடுக்குப்பம், அலெக்ஸ் பாண்டியன் வீட்டில் நகைகளை கொள்ளையடித்ததும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவரிடம் இருந்து 8 சவரன் தங்க நகை மற்றும் பைக் பறிமுதல் செய்தனர்.
சந்தோஷ் குமார் கடந்த ஓராண்டாக திருட்டில் ஈடுபட்டு வருவதும், புதுச்சேரி மாநிலம் திருபுவனை, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, காணை,அனந்தபுரம், வேட்டவலம் ஆகிய 5 போலீஸ் ஸ்டேஷன்களில், ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை