வி.ஆர்.பி., பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா

விளம்பர நோக்க செய்தி, படம் சார்...

விழுப்புரம்: விழுப்புரம் வி.ஆர்.பி.,மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமி விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை ரேவதி தலைமை தாங்கினார். தொடர்ந்து தமிழரின் பாரம்பரிய முறைப்படி, குழந்தைகள் நெல் மற்றும் அரிசியில் ‘அ’ ஆ’ எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘இந்நிகழ்வு குழந்தைகளின் கல்விப் பயணத்திற்கு இனிய துவக்கமாக அமையும்’ என பள்ளி தாளாளர் சோழன் வாழ்த்துரை வழங்கி, மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்தார்.

இதில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Advertisement