இலக்கிய சொற்பொழிவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கல்லைத் தமிழ்ச் சங்கத்தின் 253வது இலக்கிய தொடர் சொற்பொழிவு நடந்தது.
விருகாவூர் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகம் பிச்சபிள்ளை, செயற்குழு உறுப்பினர் ராபியா பேகம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். சிறப்பு தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். மனநல மருத்துவர் உதயகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் நல்லாப்பிள்ளை, தமிழக கல்வியாளர் பேரவைத் தலைவர் தொல்காப்பியன், கள்ளக்குறிச்சி அறிவு திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் தங்கவேல், துணைத் தலைவர் அம்பேத்கர் முன்னிலை வகித்தனர். கல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர் புகழேந்தி வரவேற்றார்.
இணைச் செயலாளர் ராமானுஜன், செய்தித் தொடர்பாளர் கலைமகள் காயத்ரி, ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ், சின்னப்ப தமிழர், அரியபெருமானுார் தமிழ்ச் சங்க கவிஞர் நடேசமணி, பொருளாளர் சணமுகம், கோவிந்தராசன், பகுத்தறிவு இலக்கிய மன்றத் தலைவர் ஜெயராமன், விஜயகுமார், சங்கர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
கல்லைச் சான்றோர் பேரவைத் தலைவர் ஆசுகவி ஆராவமுதன் ஆய்வுச் சிந்தனை என்னும் தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியை தமிழ் சங்க செயலாளர் மதிவாணன் தொகுத்து வழங்கினார். இணை செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை