மகளை கொன்று தாய் தற்கொலை

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, சின்ன நாகாச்சியை சேர்ந்தவர் நீதிராஜன், 28. இவரது மனைவி பிரியங்கா, 25. இவர்களது மகள் நிவியா, 2. நீதிராஜன், சென்னையில், ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிகிறார்.

இந்நிலையில், பிரியங்கா நீதிராஜனுக்கு தெரியாமல், சொந்த ஊரான கீழசேமனுாரில், தனியார் நிறுவனம் மூலம் குழுவில் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, வட்டி கட்டி வந்துள்ளார்.

நேற்று கடன் தொகையை வசூலிக்க, ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். இதுகுறித்து, மாமனார், மாமியார் கேட்டதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், மனமுடைந்த பிரியங்கா, குழந்தையின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு, வீட்டின் மாடியில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்திரக்குடி போலீசார், விசாரித்து வருகின்றனர்.

Advertisement