விஷப்பூச்சி கடித்து சிறுமி இறப்பு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் 36, இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் திவ்யபாரதி 15, உசிலம்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். ஆயுத பூஜையை முன்னிட்டு வீட்டிற்கு வந்திருந்த மகளை தன்னுடன் அழைத்துக் கொண்டு ஜெயபிரகாஷ்
டி.சுப்புலாபுரம் வனச்சரக அலுவலகம் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் வீட்டிற்கு தேவையான விறகு குச்சிகள் எடுக்க சென்றுள்ளார். அப்போது திவ்ய பாரதி விரலில் ஏதோ விஷப்பூச்சி கடித்து விட்டது. கை வலிப்பதாக கூறினார். மகளை ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்குக்கு அழைத்து சென்றார். தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி திவ்ய பாரதி இறந்தார்.ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது
-
தொடர்ந்து சரிவடையும் தங்கம் விலை; 4 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 சரிவு
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
மேலும் இரு ஹிந்தி நடிகர்களுக்கு ஸ்கெட்ச்; டைகர் ஷெராப் வழக்கில் வெளியான பகீர் தகவல்
-
ராஜராஜ சோழனின் சதய விழாவை இருட்டடிப்பு செய்திடக் கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்
-
பஞ்சாபில் ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் கைது; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
Advertisement
Advertisement