விழிப்புணர்வு கருத்தரங்கு

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக மெனோபாஸ் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. யோகா ஆசிரியை நந்தினி பேசுகையில், ‘‘மாதவிடாய் நிற்கும் (மெனோ பாஸ்) விஷயம் என்பது இயற்கையான நிகழ்வு. அந்த சமயத்தில் உடம்பில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுவதால் மன அழுத்தம், துாக்கமின்மை, கோபம், ஞாபக மறதி போன்ற மனரீதியான நிகழ்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டும். ஆசனங்கள், நாடி சுத்தி பிரணாயாமம், யோகா நித்ரா போன்ற பயிற்சிகளை செய்து மன, உடல் ரீதியாக பாதுகாக்கலாம்’’ என்றார்.

யோகா ஆசிரியர் வெங்கடேஸ்வரன், மாணவிகள் சவுந்தர்யா, ரம்யா, முத்துலட்சுமி, கனிமொழி, கங்கா ஆகியோர் பேசினர். செயலாளர் நந்தாராவ், முதல்வர் தேவதாஸ் ஏற்பாடுகளைச் செய்தனர்.

Advertisement