மகளிர் உதவி குழுவினரின் விற்பனை அங்காடி திறப்பு
பாகூர்: பாகூர் மற்றும் பரிக்கல்பட்டு கிராமத்தில், மகளிர் உதவி குழுவினரின் தயாரிப்பு பொருட்களுக்கான, விற்பனை அங்காடியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
புதுச்சேரியில் மகளிர் சுய உதவி குழுவினரால் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள், கைவினை பொருட்கள், இயற்கை மற்றும் மூலிகைப் பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் வகையில், புதுச்சேரி ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பல்வேறு பகுதியில் விற்பனை அங்காடிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக, பாகூர் கிழக்கு பஞ்சாயத்து மற்றும் பரிக்கல்பட்டு பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பிற்கான, விற்பனை அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, அங்காடியை திறந்து வைத்து, விற்பனையை துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது
-
தொடர்ந்து சரிவடையும் தங்கம் விலை; 4 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 சரிவு
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
மேலும் இரு ஹிந்தி நடிகர்களுக்கு ஸ்கெட்ச்; டைகர் ஷெராப் வழக்கில் வெளியான பகீர் தகவல்
-
ராஜராஜ சோழனின் சதய விழாவை இருட்டடிப்பு செய்திடக் கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்
-
பஞ்சாபில் ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் கைது; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்