அருணாச்சலா பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பிடம் பிடித்தனர்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடந்த பாரதியார் பிறந்தநாள் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகளில், குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர். 14 வயதுக்கு உட்பட்ட குண்டு எறிதல் போட்டியில் பள்ளி மாணவர் சண்முகவேல் முதல் இடமும், கிருத்திக் இரண்டாம் இடமும் பிடித்தனர். ஈட்டி எறிதலில் சனில்குமார் இரண்டாம் இடமும், 400 மீ., ஓட்டத்தில் கமலேஷ் முதல் இடமும், வட்டு எறிதல் போட்டியில் மாணவர்கள் நிப்ராஸ், சுஷ்மிதா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர்கள் சிவக்குமார், சிவகாயத்ரி, இளவழுதி, இந்து கவுரவிக்கப்பட்டனர். தாளாளர் பன்னீர்செல்வம், செயலாளர் சட்டநாதன், நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன், கல்வி ஆலோசகர் கார்த்திகேயன் மாணவர்களை பாராட்டி அவர்கள் எதிர்கால கடமைகள் குறித்து அறிவுறுத்தினர்.

Advertisement