கோவில்களில் விஜயதசமி விழா
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கிருஷ்ணா நகரில் உள்ள வரசித்தி விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.
கோவில் அர்ச்சகர் சுதர்சனன் தலைமையில், லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளுக்கு, சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் அர்ச்சனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வரசித்தி விநாயகர் மற்றும் துர்க்கை அம்மனை, பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவியர் பெயரில், சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, இலவசமாக நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் ஆகியவை வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடு களை, கோவில் கமிட்டி தலைவர் பொன்னுசாமி, செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் முருகன், இணை செயலாளர் பிரபு மற்றும் கமிட்டி நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
மேலும்
-
12வது மாடி ஜன்னலில் இருந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி