கார்பென்டர் வீட்டில் 20 பவுன் திருட்டு கட்டட தொழிலாளிகள் இருவர் கைது
போச்சம்பள்ளி:போச்சம்பள்ளி அருகே, கார்பென்டர் வீட்டில் திருடிய இருவரை போலீசார் கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி
மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கெங்கிநாயக்கம்பட்டியை சேர்ந்தவர்
சிவன், 43, கார்பென்டர். இவர் மனைவி சுதா, 32. இவர்களுக்கு, 12 வயதில்
மகன் உள்ளார். மகன் வெளியூரில் தங்கி படித்து வரும் நிலையில், கடந்த, ஆக.,
14ல், சுதா தன் தாயை பார்க்க கோவை சென்றார். சிவன் பணி நிமித்தமாக ஆக.,
17ல் திருப்பத்துாருக்கு வேலைக்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை
அறிந்த மர்மநபர்கள், வீட்டிலிருந்து, 20 பவுன் நகை மற்றும், 3
லட்சம் ரூபாயை திருடி சென்றனர். சிவன் புகார் படி இருவரை போச்சம்பள்ளி
போலீசார் நேற்று கைது செய்தனர்.
சம்பவம் குறித்து, போலீசார்
கூறியதாவது: போச்சம்பள்ளி மற்றும் பர்கூர் போலீசார் அடங்கிய இரு
தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்பகுதியில்,
50க்கும் மேற்பட்ட, 'சிசிடிவி' காட்சிகளை சோதனையிட்டதில் இருவர்
அப்பகுதியில் சென்றது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் தர்மபுரி
மாவட்டம், காரிமங்கலம் அடுத்த குட்டூரை சேர்ந்த கட்டட
தொழிலாளிகளான பிரபு, 38, அவரது மைத்துனர் கோகுல், 26 என தெரிந்தது.
இவர்களது பூர்வீகம் ஆந்திரா என்பதால், அங்கு நகைகளை விற்க
முயன்றுள்ளனர். இவர்களது மொபைல் டவர் லொகேஷன் மற்றும் 'சிசிடிவி'
காட்சிகள் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். திருட்டில்
தொடர்புடைய அர்ஜூனன் உள்ளிட்ட இருவரை தேடி வருகிறோம். இவர்கள்
பணிபுரியும் போதே எந்தெந்த வீடுகளில் பணம், நகை உள்ளது, எப்படி
தப்பிக்கலாம் என திட்டம் போட்டு திருடியதால், அவர்களை பிடிக்க
போலீசாருக்கு, 63 நாட்கள் ஆனது.
இவ்வாறு, கூறினர்.
மேலும்
-
12வது மாடி ஜன்னலில் இருந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி