கொல்லிமலையில் 3 நாள் மாநில அளவில் 'திரிசாரணர், திரிசாரணியர் சமாகம்' சங்கமம்
நாமக்கல்:நாமக்கல்
மாவட்டம், கொல்லிமலை வாசலுார்பட்டியில் சாரண, சாரணியர் இயக்கம்
சார்பில், மாநில அளவிலான, 'திரிசாரணர் - திரிசாரணியர் சமாகம்' என்ற
சங்கம், மூன்று நாட்கள் நடந்தது.
விழாவிற்கு, மாநில உதவி
செயலாளர் முத்தமிழ் பாண்டியன் தலைமை வகித்தார். மாநில சாரண அமைப்பு
ஆணையர் சக்திவேல் வரவேற்றார். முகாமில், 119 திரிசாரணர், 85
திரிசாரணியர், 21 திரிசாரணிய ஆசிரியர்கள், நாமக்கல்,
திருச்செங்கோடு மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களும், மாநில
களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.
சங்கமத்தில், இளைஞர்
லோக்சபாவில், பொருளாதாரம் மற்றும் மேம்பாடு, நவீன வேளாண் மற்றும்
பண்ணைகள் நலன், டிஜிட்டல் எழுத்தறிவு, செயற்கை நுண்ணறிவு ஆகிய
தலைப்புகளில், கருத்துகளை பகிர்ந்து
கொண்டனர்.
தொடர்ந்து,
பாரம்பரிய ஆடை அலங்கார கண்காட்சி, கிராமிய நடனம், தானியங்களை கொண்டு
சமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், நெகிழி
பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பதை வலியுறுத்தி செம்மேடு,
சீக்குப்பாறை காட்சி முனை பகுதிகளில், விழிப்புணர்வு நடைபயணம்
மேற்கொள்ளப்பட்டது. கொல்லிமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
சார்பில், பேரிடர் மேலாண் பயிற்சி வழங்கப்பட்டது.
நிறைவு
விழாவிற்கு, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், மாவட்ட முதன்மை
ஆணையருமான மாதவன் தலைமை வகித்தார். விழாவில், மாநில அளவிலான
'திரிசாரணர் - திரிசாரணியர் சமாகம்' என்ற சங்கம் நிகழ்ச்சியில்
பங்கேற்ற அனைவருக்கும் ஸ்டீல் தண்ணீர் குடுவைகள் வழங்கப்பட்டன.
மேலும்
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது
-
தொடர்ந்து சரிவடையும் தங்கம் விலை; 4 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 சரிவு
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
மேலும் இரு ஹிந்தி நடிகர்களுக்கு ஸ்கெட்ச்; டைகர் ஷெராப் வழக்கில் வெளியான பகீர் தகவல்
-
ராஜராஜ சோழனின் சதய விழாவை இருட்டடிப்பு செய்திடக் கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்
-
பஞ்சாபில் ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் கைது; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்