ஆட்சிக்கு வரும் கட்சியில் சமூக விரோதிகள் இணைவது வாடிக்கையாகி விட்டது: அண்ணாமலை விமர்சனம்
கோவை: ''எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதில் சமூக விரோதிகள் தங்களை இணைத்துக்கொள்வது வாடிக்கையாகி விட்டது,” என 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவையில், நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 செல்வோரில், ஒன்பது சதவீத மாணவர்கள், ஆறு சதவீத மாணவியர் எண்ணிக்கை குறைந்து விட்டது. உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை, 50 சதவீதத்திலிருந்து, 47 சதவீதமாக குறைந்து விட்டது.
மத்திய அரசு மறுப்பு:
ஜெர்மன், பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளை மத்திய அரசு அனுமதிக்க மறுத்ததால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சிரமம் ஏற்படுகிறது. வெளிநாட்டு மொழிகளுக்கு மத்திய அரசும், இந்திய மொழிகளுக்கு மாநில அரசும் கட்டுப்பாடுகள் விதிப்பது தவறு. மத்திய அரசு, 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும்.
கடந்த தி.மு.க., ஆட்சியின்போதே, கஞ்சா கடத்தலில் த.வெ.க.,வினர் ஈடுபட்டனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், சமூக விரோதிகள், தங்களை அதில் இணைத்துக்கொள்வது தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது. இதனால் உள்ளூர் போலீசார் அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள். இதை தடுக்க, இரும்புக்கரம் கொண்டு முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் தொகுதி வேட்பாளரை, கோவைக்கு போலீசார் சென்று கைது செய்தது ஏன்? இது, நோட்டீஸ் வழங்கி, 24 மணி நேரத்தில் வருமாறு கூறக்கூடிய வழக்கு தான். ஆளுங்கட்சியின் கைப்பாவையாக, போலீசார் மாறக்கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.
பொருளாளர் நியமனம்:
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: வீ த லீடர்ஸ் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிதி நிர்வாகத்தைச் சிறப்பாக ஒருங்கிணைக்கவும் பாலாஜி உத்தம ராமசாமி மாநிலப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார். அமைப்பின் நிதி நிர்வாகம், வரவு செலவுக் கணக்குகளை முறைப்படுத்துதல் நிதி சார்ந்த செயல்பாடுகளை வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை அவர் மேற்கொள்வார். அவர் தனது பொறுப்பில் முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செயல்பட்டு அமைப்பின் வளர்ச்சிக்கும், அதன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கிட வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பேசாமல் கர்நாடக ஐ பி எஸ் அதிகாரியா தொடர்ந்து இருந்தால் இப்போ இவர் Deputy Inspector General of Police DIG ரேங்க்.
விதி யாரை விட்டது???
இவர் பாஜகவில் சேர்ந்ததும் அந்த அடிப்படையிலா?
பாஜாகாவை பப்ளிக்கா கலாய்க்கிறாரா?
சமூக விரோதிகள் எந்த ஆளும்கட்சி வந்தாலும் நன்கொடைகள் கொடுத்து பதவிகள் பெறுவது ஆண்டாண்டு காலமாக நடை பெற்றுவருகிறது .தங்கள் தொழிலை தொடருவார்கள் ஆளும் கட்சி ஆசிர்வாதமும் இருக்கும்
அண்ணாமலை உங்களால் நான் பிஜேபிகாரன் என்று வெளியில் சொல்ல முடிந்தது. ஆனால் இன்று உன்னுடைய போக்கே சரியில்லை. சி ஜே பி க்கும் ராகுலுக்கும் நீங்கள் முட்டுக் கொடுப்பதை பார்க்கும் பொழுது உன் மீது கோபம் கோபமாக வருகிறது. எனவே wTL இல் இருந்து வெளியேறி விட்டேன்.
அதுக்கு அடித்தளம் போட்டதே நீங்களும் நீங்க வளர்ந்த உங்க பஜகவும் தானே
மாநிலத்தை ஆளும் கட்சியாக இல்லா விட்டாலும் நீங்கள் பா.ஜ.க தமிழக தலைவராக இருந்த போது இதே மாதிரியான நிறைய நபர்கள் அன்றைய பா.ஜ கட்சியில் இணைந்ததாகவும் நீங்களும் இணைத்துக் கொண்டதாகவும் அன்றைய பத்திரிக்கைகளில் தொடர்ந்து செய்திகள் வெளியானதே? இதற்கு பதில் ஏதும் உண்டா?
அது வந்து…மேலும்
-
பிரியங்கா மகன் நடத்திய கண்காட்சியில் சர்ச்சை புகைப்படங்கள் அகற்றம்
-
செங்கடலில் கப்பல் மீது சவுதி அரேபியா தாக்குதல்; இந்தியர்கள் 14 பேர் பத்திரமாக மீட்பு
-
அங்கன்வாடி மையம் புதுப்பிக்கும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
-
கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியத்தில் புல் நறுக்கும் கருவி
-
கடலுார் சிறையில் மொபைல் பறிமுதல்
-
எல்லாரும் வாழும் எம்ஜிஆர் ஆகிட முடியாது; அதுக்கு மனசு வேணும்: அமைச்சர் கீர்த்தனா பேட்டி