அங்கன்வாடி மையம் புதுப்பிக்கும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டடம் புதுப்பிக்கும் பணியினை அமைச்சர் ராஜவேலு துவக்கி வைத்தார். நெட்டப்பாக்கம் தொகுதி, நெட்டப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை, பொதுப்பணித்துறை மூலம் ரூ. 11 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட உள்ளது. இப்பணியினை அமைச்சர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரி பாலாஜி, பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு செயற்பொறியாளர் வைத்தியநாதன், உதவிப் பொறியாளர் சம்பத், இளநிலை பொறியாளர் கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள ரூ. 37 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் பதுப்பிக்கும் பணியினை அமைச்சர் துவக்கி வைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்
-
பணம், தங்க நகை திருடிய மூவர் கைது
-
பாதுகாப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்காத பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை பாயும்
Advertisement
Advertisement