வடிகால் வசதி இல்லாததால் தேங்கும் மழை நீர்

நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களக கனமழை பெய்து வருகிறது.

அதேபோல், நாமக்கல் நகர் பகுதியில் தொடர்ந்து, மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. அதனால், குட்டை மேல தெரு, கோட்டைச்சாலை, பரமத்தி சாலை உள்ளிட்ட பகுதியில் மழை நீர் தேங்கும். அதேபோல், மோகனுார் சாலை, டீச்சர்ஸ் காலனி, மாநகராட்சியின், 39வது வார்டு பகுதியில் உள்ள சாலையின் இருபக்கமும் போதிய சாக்கடை வடிகால் வசதி இல்லாததாலும், மேலும் அந்த சாலை தாழ்வாக இருப்பதாலும் மழைநீர் வெளியே செல்ல வழி இல்லாமல் குளம்போல் தேங்கியுள்ளது.
அதனால், துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி குடியிருப்பினர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, தாழ்வாக உள்ள தார்ச்சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement