நாமக்கல் பழைய அரசு மருத்துவமனையில் விரைவில் ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கம்
நாமக்கல்:நாமக்கல்லில்,
பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், 24 மணி நேரமும் செயல்பட கூடிய
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
நாமக்கல் - மோகனுார் சாலையில், அரசு
மருத்துவ கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்நிலையில்,
நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், புதிதாக
கட்டப்பட்டு, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அங்கு இடமாற்றம்
செய்யப்பட்டது. நாமக்கல் நகரின் மையத்தில் செயல்பட்ட அரசு
மருத்துவமனை, 10 கி.மீ., தள்ளி சென்றதால், அவசர சிகிச்சைக்கு வரும்
நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதனால், 24
மணி நேர அவசர சிகிச்சை பிரிவு துவங்க வேண்டும் என, பல்வேறு
அமைப்பினரும், அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில்,
நாமக்கல் கோட்டை சாலையில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு
வருகிறது. இங்கு, நாமக்கல் நகரை சுற்றி உள்ள பகுதி மக்கள் காய்ச்சல்,
இருமல், சளி மற்றும் உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று
வருகின்றனர். அதேபோல், கர்ப்பிணிகளும் இங்கு வந்து ஆலோசனைகளை
பெறுகின்றனர்.
இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மாநகரின் மைய
பகுதியில் உள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மக்களுக்கு பயனாக இருந்து
வருகிறது. ஆனால், இரவு நேரத்தில் மையம் செயல்படாததால், அவசர
சிகிச்சைகளுக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில்
செயல்படும் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பொதுமக்கள்
செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அதனால், 'நகர்ப்புற ஆரம்ப
சுகாதார சுகாதார நிலையத்தை, 24 மணி நேரமும் செயல்படும் வகையில், தரம்
உயர்த்த வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நாமக்கல்
மாநகரின் மைய பகுதியில் உள்ள கோட்டை சாலையில், நகர்ப்புற ஆரம்ப
சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அவற்றை, 24 மணி நேரமும் செயல்பட
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையம்
செயல்படும் இடத்தில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவற்றை
கருத்தில் கொண்டு, நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள பழைய அரசு
மருத்துவமனையில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய நகர்ப்புற ஆரம்ப
சுகாதார நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இது செயல்பாட்டிற்கு
கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது
-
தொடர்ந்து சரிவடையும் தங்கம் விலை; 4 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 சரிவு
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
மேலும் இரு ஹிந்தி நடிகர்களுக்கு ஸ்கெட்ச்; டைகர் ஷெராப் வழக்கில் வெளியான பகீர் தகவல்
-
ராஜராஜ சோழனின் சதய விழாவை இருட்டடிப்பு செய்திடக் கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்
-
பஞ்சாபில் ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் கைது; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்