காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் விஜய் மரியாதை

5

சென்னை: காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, சென்னை டிஜிபி அலுவலகம் காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார். அவர் மரக்கன்றை நட்டு வைத்தார்.

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவு: 1959ம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் தாய்நாட்டைக் காப்பதற்காக வீரமரணமடைந்த 10 மத்திய ரிசர்வ் காவல் படைக் காவலர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகத்தைப் போற்றும் காவலர் வீரவணக்க நாளில், நாட்டில் அமைதியையும், சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்டும் உயரிய கடமையில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த காவல்துறையினர் அனைவருக்கும் வீர வணக்கங்கள்.

இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள், குற்றச் சம்பவங்கள், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல்கள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, துணிவுடனும், விழிப்புடனும் பணியாற்றும் காவலர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.

கடமையின் பாதையில் இன்னுயிர் நீத்து, அமரர்களான வீரத் தியாகிகளுக்குத் தலைவணங்கி அஞ்சலி செலுத்துவதோடு, காலநேரம் கருதாமல், அயராது உழைத்து, நாட்டின் அரணாகத் திகழும் போலீசாரின் உன்னதப் பணிகளைப் போற்றிடுவோம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

காவலர் நினைவுச்சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை; தினமலர் வெப்சைட் மற்றும்

யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement