செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் மறைவு; பிரதமர், துணை ஜனாதிபதி இரங்கல்
புதுடில்லி; வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்த கலைஞர் உம்மிடி எத்திராஜ் மறைவுக்கு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் இரங்கல் பதிவு;
உம்மிடி எத்திராஜ் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்த அவர், முன்னாள் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்தற்காக என்றுமே நினைவு கூரப்படுவார்.
பல ஆண்டுகள் கழித்து, 2023ம் ஆண்டு புதிய பார்லி. கட்டடத்தில் அந்த செங்கோலுக்கு உரிய கவுரவத்தை வழங்கி சிறப்பிக்கும் வாய்ப்பு அரசுக்கு கிடைத்தது. அப்போது உம்மிடி எத்திராஜை சந்தித்து, நாட்டிற்கும், அதன் கலாசாரத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி கூறும் பாக்கியம் கிடைத்தது. அவரது வாழ்க்கையும், கலைத்திறனும் நாட்டின் பாரம்பரிய தொடர்பை பிரதிபலிக்கின்றன.
துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் இரங்கல்;
நாட்டின் பாரம்பரிய புனித சின்னமான வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய உம்மிடி எத்திராஜ் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது இந்த முயற்சி என்றும் மரியாதையுடனும், நன்றி உணர்வுடனும் நினைவு கூரப்படும். கைவினைக் கலை மரபை பாதுகாப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பு விலைமதிப்பற்றது.
ஊர் பேர் தெரியாத கூத்தாடிகளுக்கு அரசு முந்திரிக் கொட்டைத் தனமாக அரசு மரியாதை செலுத்தும் திராவிட தவெக அரசு இவருக்கு அரசு மரியாதை தருமா? அல்லது இவர் கூத்தாடி இல்லை என்பதற்காக அரசு மரியாதை செலுத்தாமல் கண்டுகொள்ளாமல் விடுமா?
நாடு எங்கே போகிறது ?
நாடு நகராது …
தசரதன் குடும்பத்தோடு டாஸ்மாக் போகிறான்
கேனைத்தனமான கேள்வி தசரதன்
செங்கோலின் புகழால் இவர் இறந்தும் வாழ்கிறார். வாழ்க மோடியின் புகழ்.
இவரை பேனா வடிவமைக்க சொல்லி அறிவாலயத்தில் வைத்திருக்கலாம்
பாவம் தி.மு.க உம்மை மிகவும் பாடாய்ப் படுத்துகிறது. அவ்வளவு விசுவாசம் பாசம். பார்த்து வழுக்கப் போகிறது. தி.மு.கா-வே தி.மு.கா-வை மறந்தாலும் நீர் மறவீர், ஊண் உறக்கமின்றி. ததாஸ்து.