கோபியில் மறியல் 100 பேர் கைது
கோபி:பயிர்கடனை தள்ளுபடி செய்யக்கோரி, கோபியில் சாலை மறியலில் ஈடுபட்ட, 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
த.வெ.க.,
தேர்தல்கால வாக்குறுதியின்படி, கூட்டுறவு பயிர்கடனை தள்ளுபடி
செய்யக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில், மாவட்ட
தலைவர் பழனிசாமி தலைமையில், கோபி பஸ் ஸ்டாண்டில் நேற்று குவிந்தனர்.
மாநில துணைத்தலைவர் துளசிமணி, மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட
துணைத்தலைவர் முனுசாமி அடங்கிய குழுவினர் கோரிக்கையை வலியுறுத்தி
பேசினர். பருவமழை பொய்த்துபோனதால், விவசாயிகளுக்கு வறட்சி
நிவாரணத்தொகை வழங்க வேண்டும். வேலையிழந்த விவசாய
தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை
வலியுறுத்தி, கோபி பஸ் ஸ்டாண்டு முன், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட, 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது
-
தொடர்ந்து சரிவடையும் தங்கம் விலை; 4 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 சரிவு
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
மேலும் இரு ஹிந்தி நடிகர்களுக்கு ஸ்கெட்ச்; டைகர் ஷெராப் வழக்கில் வெளியான பகீர் தகவல்
-
ராஜராஜ சோழனின் சதய விழாவை இருட்டடிப்பு செய்திடக் கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்
-
பஞ்சாபில் ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் கைது; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
Advertisement
Advertisement