தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாலை மறியல் போராட்டம் மாவட்டத்தில் பேர் கைது
திருக்கோவிலுார்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த மறியலில் போராட்டத்தில்
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் பயிர்களுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூர் பஸ் நிலையம் எதிரில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் வட்ட செயலாளர் தர்மேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினர். தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சரவணன் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கச்சாலையில் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் உட்பட 60 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை
உளுந்தூர்பேட்டை– திருவெண்ணைநல்லுார் சாலை சந்திப்பு அருகே நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற மாவட்டத் தலைவர் கஜேந்திரன், செயலாளர்கள் ஏழுமலை, ஆறுமுகம், பொருளாளர் ஏழுமலை, நிர்வாகிகள் வீரன், ஜோதி ராமன், அய்யனார், சிவகுமார், முருகதாஸ், தணிகாசலம், ஜானகிராமன், சீனிவாசன், பழனிவேல், செந்தில்குமார், பச்சையப்பன் உள்ளிட்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது
-
தொடர்ந்து சரிவடையும் தங்கம் விலை; 4 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 சரிவு
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
மேலும் இரு ஹிந்தி நடிகர்களுக்கு ஸ்கெட்ச்; டைகர் ஷெராப் வழக்கில் வெளியான பகீர் தகவல்
-
ராஜராஜ சோழனின் சதய விழாவை இருட்டடிப்பு செய்திடக் கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்
-
பஞ்சாபில் ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் கைது; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்