சேறும் சகதியான சாலையால் குடிகாடு கிராம மக்கள் அவதி

சேத்தியாத்தோப்பு: புடையூர் ஊராட்சி குடிகாடு கிராமத்திற்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம், சேத்தியாத்தோப்பு அருகே புடையூர் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குடிகாடு கிராம சாலை முழுவதும் பழுடைந்து சேறும் சகதியுமாக உள்ளது. மெயின் ரோட்டிலிருந்து கிராமத்திற்கு செல்லும் 2 கி.மீ., துாரமுள்ள சாலை 5 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை போடப்பட்டது.

கிராமத்தில் உள்ள குளத்தில் விவசாயிகள் பெயரில் வண்டல் மண் எடுத்தவர்கள் சாலை முழுவதும் மண் சிதறி சாலையில் விழுந்து ஆங்காங்கே முட்டு முட்டாக கிடக்கிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையினால் சாலையில் கிடந்த மண் சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாகனங்களில் செல்வோர் சேற்றில் வழுக்கி விழுகின்றனர்.

எனவே ஒன்றிய உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சேற்றை அகற்றி, புதிய தார்சாலை அமைக்க வேண்டும்.

Advertisement