காலநிலை கல்வி பயிற்சி முகாம் கலெக்டர் துவக்கி வைப்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் மாவட்ட வனத்துறை மூலம் காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் காலநிலை கல்வி பயிற்சி முகாம் நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். இதில்,
கலெக்டர் பேசுகையில், ‘பள்ளி மாணவர்களிடையே காலநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம், 3 தினங்கள் நடக்கும் பயிற்சியில், காலநிலை மாற்றம் குறித்த புரிதலை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,’என்றார்.
இதில், சதுப்பு நிலங்கள் தொடர்பான கலந்தாய்வு பயிலரங்குகளில் பங்கேற்றவர்களுக்கு பயிற்சிக் கருவிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஆனந்த் குமார் சிங், மாவட்ட வன அலுவலர் குருசாமி, சி.இ.ஓ., பாலமுரளி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் நந்தகோபாலகிருஷ்ண உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும்
-
கணவனுக்கு வீரவணக்கம் செலுத்திய மனைவியால் போலீசார் நெகிழ்ச்சி
-
இறக்கும் தருவாயிலும் பயணியர் உயிரை காப்பாற்றிய டிரைவர்: 86 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்
-
குமரியில் ரயில்தடம் புரண்டு விபத்து; ரயில்சேவை பாதிப்பு
-
அமெரிக்கா தலைமையில் முத்தரப்பு பேச்சு: புடின், ஜெலென்ஸ்கி சம்மதம்
-
திருநெல்வேலியில் அதிக மழைப்பொழிவு எங்கு தெரியுமா?
-
தவறான விளம்பரங்கள், விதி மீறல் குற்றச்சாட்டு; நெஸ்லே இந்தியா, வெல்நெஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்