விழுப்புரத்தில் த.வா.க., வினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் த.வா.க., நகர செயலர் தலைமையில் 200 பேர், லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், மாற்று கட்சியினர் இணையும் விழா இன்று நடந்தது. விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.

அப்போது, தமிழக வாழ்வுரிமை கட்சியின், விழுப்புரம் நகர செயலாளர் மோகன் தலைமையில், நகர இளைஞரணி செயலர் இளவரசன், நகர மாணவரணி செயலர் விக்ரம், நகர நிர்வாகிகள் பிரபாகரன், ராஜேஷ், தொண்டரணி சேதுராமன், தகவல் தொழில்நுட்ப அணி ரூபன் உள்ளிட்ட 200 பேர், அக்கட்சியிலிருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, லட்சுமணன் எம்.எல்.ஏ., வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், தி.மு.க., மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணப்பன், விழுப்புரம் கிழக்கு நகர பொறுப்பாளர் வெற்றிவேல், கோலியனுார் கிழக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, மத்திய ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட தொண்டரணி கபாலி, சிறுபான்மை அணி தாகீர், தொழிலாளர் அணி முத்துசாமி, ராம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement