இன்ஸ்டா ரீல்ஸால் வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள்: தொடரும் பழிக்குப்பழி

5

மதுரை: இன்ஸ்டா சமூகவலைதளத்தில் 'டாண்' ஆக தாங்கள் வலம் வருவதை சில இளைஞர்கள் 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டு தங்கள் 'லைப்பை' தொலைத்து வருகிறார்கள். இதனால் ஏற்படும் பழிக்குப்பழி கொலைகளை தடுக்க முடியாமல் போலீசார் தவிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் இன்ஸ்டா 'ரீல்ஸால்' பிரபலமான 'சுள்ளான்' மதன் 26, முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டார். இதற்கு பழி தீர்ப்போம் என்று அவரது ஆதரவாளர்கள் அதே 'இன்ஸ்டா'வில் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதேபோல் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் 'யார் டாண்' என்று 'இன்ஸ்டா'வில் வீடியோ வெளியிட்ட மோதலில் சூர்யா 24, கொலை செய்யப்பட்டார். 2021ல் கோவையில் அரிவாளுடன் வீடியோ வெளியிட்டது தொடர்பாக இருதரப்பினர் மோதிக்கொண்டதில் அசோக்குமார் கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டில் எதிர்தரப்பினருக்கு வீடியோ மிரட்டல் விடுத்த ஸ்ரீராம் பழி தீர்க்கப்பட்டார்.

போலீசார் கூறியதாவது: சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவது, ரவுடியிசத்தை புகழ்வது, மிரட்டல் விடுப்பதை தொடர்ந்து கண்காணிக்கிறோம். 20க்கும் மேற்பட்ட சமூகவலைதள கணக்குகளை முடக்கி வைத்துள்ளோம். போலி கணக்குகள், மாற்றுப் பெயர்களில் செயல்படுபவர்களை தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கிறோம் என்றனர்.

Advertisement