தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் தருவதாக ரூ.300 கோடி முறைகேடு; மாஜி அமைச்சர் மனைவிக்கு சிக்கல்
சென்னை : தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக, பல கோடி ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பாக, புதிய வீடியோ சிக்கி இருப்பதால், தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் மனைவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக, பணம் மோசடி செய்ததாக, அக்கட்சியின் நிர்வாகி அரசகுமார், 58, என்பவர் உட்பட மூவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்; அரசகுமார் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இவரது கூட்டாளியான, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமாரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இம்முறைகேடு தொடர்பாக, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மகேஷ், அவரது உறவினர் வாலாடி கார்த்திக், பிரகாஷ் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடந்துள்ளது.
முத்துக்குமார் உறவினர் வீடுகளில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். அவர்களுக்கு தற்போது புதிய வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. அதில், 420 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
முத்துகுமாருக்கு, 70 கோடி ரூபாயும், அரசகுமாருக்கு, 50 கோடி ரூபாயும் தரப்பட்டு உள்ளதாகவும், மகேஷ் வீட்டில், 300 கோடி ரூபாய் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும், வீடியோவில் குரல் பதிவு மட்டும் செய்யப்பட்டு உள்ளது. இந்த, 300 கோடி ரூபாய் விவகாரத்தில், மகேஷ் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: முறைகேடில் மகேஷ் மனைவிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளன. அதன் அடிப்படையில் விரிவான விசாரணை நடக்கிறது. விரைவில் அவருக்கு, 'சம்மன்' அனுப்பி விசாரிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
வீடு இடிக்கப்பட்ட 42 குடும்பத்தினர் மாற்றிடம், இழப்பீடு கேட்டு மனு
-
துாக்கிட்டு தொழிலாளி விபரீதம்
-
ஜேடர்பாளையம் சாலையில் தேங்கும் மழைநீரால் பள்ளி மாணவர்கள் அவதி
-
வரும் 25ல் ஆர்.எஸ்.எஸ்., பேரணி தடை விதிக்கக்கோரி வி.சி.க., மனு
-
காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
-
பயிர் கடன் தள்ளுபடி செய்யக்கோரி மறியலில் ஈடுபட்ட 27 பேர் கைது