பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிவராஜன் சோலைமலை; ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையை அறிவித்தார் முதல்வர் விஜய்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்;
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் சிவராஜன் சோலைமலைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
வீரர் சிவராஜன் சோலைமலை சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ. 50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இச்சாதனையைப் படைத்துள்ளார்.
தமிழகத்தின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு புதிய ஊக்கத்தை அளித்திடும் வகையில் அவரது வெற்றி அமைந்துள்ளது. வீரர் சிவராஜன் சோலைமலை, மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்.
இவ்வாறு முதல்வர் விஜய் அறிக்கையில் கூறி உள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது
-
தொடர்ந்து சரிவடையும் தங்கம் விலை; 4 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 சரிவு
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
மேலும் இரு ஹிந்தி நடிகர்களுக்கு ஸ்கெட்ச்; டைகர் ஷெராப் வழக்கில் வெளியான பகீர் தகவல்
-
ராஜராஜ சோழனின் சதய விழாவை இருட்டடிப்பு செய்திடக் கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்
-
பஞ்சாபில் ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் கைது; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
Advertisement
Advertisement