நள்ளிரவில் இடியுடன் கனமழை: சாலையில் விழுந்த மரங்கள் அகற்றம்
குன்னுார்: குன்னுாரில் நள்ளிரவில் பலத்த இடியுடன் கனமழை பெய்ததில் கரன்சி சாலையில் மரம் விழுந்தது.
குன்னுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக இன்று காலை, 6:00 மணியளவில் குன்னுார் ஆடர்லி சாலை கரன்சி அருகே, காட்டு மரம் சாலையின் குறுக்கே வேரோடு விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் பொதுமக்கள், இணைந்து மரத்தை வெட்டி அகற்றி சாலையை சீர் செய்தனர். சம்பவத்தால், ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதன் சுற்றுப்புற பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதை மின் ஊழியர்கள் சரி செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரியங்கா மகன் நடத்திய கண்காட்சியில் சர்ச்சை புகைப்படங்கள் அகற்றம்
-
செங்கடலில் கப்பல் மீது சவுதி அரேபியா தாக்குதல்; இந்தியர்கள் 14 பேர் பத்திரமாக மீட்பு
-
அங்கன்வாடி மையம் புதுப்பிக்கும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
-
கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியத்தில் புல் நறுக்கும் கருவி
-
கடலுார் சிறையில் மொபைல் பறிமுதல்
-
எல்லாரும் வாழும் எம்ஜிஆர் ஆகிட முடியாது; அதுக்கு மனசு வேணும்: அமைச்சர் கீர்த்தனா பேட்டி
Advertisement
Advertisement