காரைக்குடி அருகே சுரங்கப்பாதையில் கூரை பணி
காரைக்குடி: காரைக்குடி கண்டனுார் செல்லும் வழியில் ரயில்வே சுரங்கப்பாதையில், மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்த நிலையில் தற்போது கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
காரைக்குடி அழகப்பா இன்ஜி., கல்லூரி அருகே, மாத்தூர் கண்டனூர் செல்லும் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. புதுவயல், கண்டனூர் பகுதியில் இருந்து வருபவர்கள் பாரி நகர், ஸ்ரீராம் நகர், கோட்டையூர் சுற்றி பல மைல் துாரம் அலைவதை தடுக்க
இந்த ரயில்வே சுரங்க பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி விடுகிறது. நீரின் அளவு தெரியாமல், பாதையை கடக்க முயல்வோர் தண்ணீரில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது. இதுகுறித்து தொடர்ந்து புகார் எழுந்தது. தினமலர் நாளிதழிலும் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது சுரங்கப்பாதையில் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும்
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்
-
பணம், தங்க நகை திருடிய மூவர் கைது
-
பாதுகாப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்காத பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை பாயும்
-
கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை