பணம், தங்க நகை திருடிய மூவர் கைது
குளித்தலை,:குளித்தலை
அடுத்த ராஜேந்திரம் கிராமத்தில், கடந்த ஜூலை 27ம் தேதி, வீட்டின்
புகுந்து 8 பவுன் நகை, 1.25 லட்சம் ரூபாயை திருடி சென்ற சிறுவன் உட்பட
மூவரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை அருகே ராஜேந்திரம்
பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் ஓய்வு பெற்ற காவலர் சுரேஷ். இவரது
மனைவி ரூபினி. இருவரும் சொந்த வேலையாக கேரளா சென்றிருந்த நிலையில்,
மேல்மாடி அறையின் கழிவறை பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக புகுந்து,
பீரோவில் இருந்த 1.25 லட்சம் ரூபாய், 8 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள்
திருடி சென்றனர்.
குளித்தலை போலீசார் விசாரித்து, இதே ஊரை சேர்ந்த
மணிகண்டன், 27, பட்டவர்த்தியை சேர்ந்த பரவீன்குமார். 25 மற்றும் 16
வயது மாற்றுத்திறனாளி சிறுவன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்கள்
மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டனர்.