டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதல்நிலைத் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்பு, ஆக.11ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 821 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியானது. செப்.9ம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பம் பெறப்பட்டது. தற்போது 821 காலிப்பணியிடங்கள் என்பது 846 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
முதல்கட்டமாக முதல்நிலை தேர்வு நவ.1ம் தேதி நடக்கிறது. அதற்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம்;
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணைய தளம் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒற்றை பதிவு (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது
-
தொடர்ந்து சரிவடையும் தங்கம் விலை; 4 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 சரிவு
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
மேலும் இரு ஹிந்தி நடிகர்களுக்கு ஸ்கெட்ச்; டைகர் ஷெராப் வழக்கில் வெளியான பகீர் தகவல்
-
ராஜராஜ சோழனின் சதய விழாவை இருட்டடிப்பு செய்திடக் கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்
-
பஞ்சாபில் ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் கைது; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்