நீர்பெயர் – வேட்டூர் சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
சித்தாமூர்: நீர்பெயர் – வேட்டூர் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சித்தாமூர் அருகே பூரியம்பாக்கம் கிராமத்தில் இருந்து நீர்பெயர் வழியாக வேட்டூர் செல்லும் சாலை 5 கி.மீ., துாரம் கொண்டது. இந்த சாலை வழியாக கீழ்வசலை, மேல்வசலை, வேட்டூர் உள்ளிட்ட கிராம மக்கள் சித்தாமூர், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். நீர்பெயர் சாலை குறுகலாக உள்ளதால், அவ்வழியே எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒதுங்க இடமின்றி சிரமப்படுகின்றன. அதே வழியில் கல் குவாரிக்கு செல்லும் லாரிகள் அதிகளவில் செல்வதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து, நீர்பெயர் – வேட்டூர் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்
-
பணம், தங்க நகை திருடிய மூவர் கைது
-
பாதுகாப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்காத பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை பாயும்
-
கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை