ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு தாலுகா அமைக்கப்படும்: வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., உறுதி
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் நடந்த தற்காலிக பி.டி.ஓ., அலுவலக துவக்க விழாவில், விரைவில் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு தாலுகா அமைக்கப்படும் என வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
ரிஷிவந்தியம் நடந்த நிகழ்ச்சியில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேசியதாவது: ரிஷிவந்தியத்தில் தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டுமென்ற பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சிகளின் நீண்ட கால கனவை கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, அப்போதைய முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.
விரைவில் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு தாலுகா பிரிக்கப்படும். இது குறித்து சட்டசபையில் குரல் கொடுத்ததுடன், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனிடமும் கோரிக்கை வைத்துள்ளேன். தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய ரிஷிவந்தியம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் அதிக பட்சமான திட்டங்கள் நடந்திருக்கிறது. சிமென்ட்சாலை, கழிவுநீர் கால்வாய், மின்விளக்கு, குடிநீர் என எந்த திட்டமாக இருந்தாலும் அதிகளவு கொடுத்து, அதிக பணிகள் நடந்த முதல் 5 தொகுதிக்குள் ரிஷிவந்தியத்தை கொண்டு வந்துள்ளோம்.
மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டியுள்ள நிறைய பணிகளுக்கு நிச்சயம் குரல்கொடுப்பேன். இந்த அலுவலகம் அமையபெற்றதால் நிறைய திட்டங்கள் நடந்து, மக்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும்.