அரங்கநாத பெருமாள் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று இரவு அம்பு போடுதல் நிகழ்ச்சி நடந்தது.
வாணாபுரம் அடுத்த ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடந்தது. விஜயதசமி தினத்தன்று மகிஷாசூரனை அம்பாள் வதம் செய்ததாக ஐதீகம். இதையடுத்து, கோவிலின் முன் வாழை மரத்தை நட்டு, அதில் மகிஷாசூரனை மந்திரபூர்வமாக ஆவாஹனம் செய்தனர். தொடர்ந்து, உற்சவர் அரங்கநாத பெருமாள் ஹம்ச வாகனத்தின் மீது ரங்கராஜராக எழுந்தருளி வாழை மரத்தை நோக்கி அம்பு எய்தினார். மாட வீதி வழியாக சுவாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேஷலட்சுமி குமார் குடும்பத்தினர் செய்திருந்தனர். செயல்அலுவலர் சூரியநாரயணன், எழுத்தர் லோகநாதன், பணியாளர் சிவபிரகாஷ், அறங்காவலர் குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு பஸ் மண்ணில் புதைந்ததில் 6 பேர் பலியானதாக அச்சம்
-
வார இறுதி நாள் இன்றைய நிலவரம்; 5 நாட்களில் சவரனுக்கு ரூ.4,080 சரிந்த தங்கம் விலை சற்று உயர்வு
-
நீலகிரியில் ஆங்காங்கே மண் சரிவு; 2 பேர் காயம்
-
ஊக்கம் அளிக்கும் தன்னலமற்ற சேவை; இந்தோ-திபெத் எல்லை காவல் படைக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
விமான பயண கட்டணத்தை குறைக்க இணைந்து செயல்படணும்; முதல்வர் விஜய்க்கு மத்திய அமைச்சர் நன்றி
-
தமிழகத்தில் பரவலாக மழை; நீலகிரியில் கொட்டியது கனமழை
Advertisement
Advertisement